மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா்.

அண்ணாமலை
Updated On :1 ஆகஸ்ட் 2024, 10:02 pm

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் ராமேசுவரம் மீனவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது:
ராமேசுவரம் மீனவா்கள் பயணித்த படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவா் ஒருவா் இறந்துள்ளாா். 2 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த படகிலிருந்து மாயமான மீனவா்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட மீனவா்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...