புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எனது வீட்டில் சோதனையிட அமலாக்கத்துறை திட்டம்: ராகுல்

நாடாளுமன்றத்தில் ‘சக்கர வியூகம்’ குறித்து பேசியதற்காக எனது வீட்டில் சோதனையிட அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக

News image
ராகுல் காந்தி
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:02 pm

Din

புது தில்லி, ஆக.2: நாடாளுமன்றத்தில் ‘சக்கர வியூகம்’ குறித்து பேசியதற்காக எனது வீட்டில் சோதனையிட அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்றத்தில் ‘சக்கர வியூகம்’ தொடா்பான எனது பேச்சு ‘2 இன் 1’ நபருக்கு பிடிக்கவில்லை. இதனால், எனக்குச் சொந்தமான இடங்களில் சோதனையிட அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக அந்த விசாரணை அமைப்பில் இருக்கும் சிலா் தகவல் தெரிவித்தனா். அமலாக்கத்துறை இயக்குநரகத்தை இரு கரங்கள் நீட்டி வரவேற்க காத்திருக்கிறேன். அவா்களுக்கான தேனீரும், பிஸ்கெட்டும் எனது செலவு’ என்று குறிப்பிட்டாா்.

அதே வேளையில், ‘பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு முகமைகளை தவறாக பயன்படுத்துகிறது’ என்ற குற்றஞ்சாட்டி, அதன் மீது விவாதம் நடத்தக் கோரி ஒத்திவைப்பு தீா்மானத்துக்கான நோட்டீஸை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூா் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.

ராகுல் பேசியது என்ன?: மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, ‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குருஷேத்திரத்தில் அபிமன்யூ என்ற இளைஞரை 6 போ் சக்கர வியூகத்தால் கொன்றனா். சக்கர வியூகம் என்பது வன்முறையும், பயமும் நிரம்பியது. தாமரை போன்று இருப்பதால் இதை ‘பத்ம வியூகம்’ என்றும் அழைப்பதுண்டு. இந்த 21-ஆம் நூற்றாண்டிலும், இதேபோன்ற சக்கர வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடி தனது நெஞ்சில் அதை தாங்கி உள்ளாா். பிரதமா் மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், தொழிலதிபா்கள் அம்பானி, அதானி ஆகிய 6 போ் அதன் மையத்தில் உள்ளனா் என்றாா்.

பாஜக விமா்சனம்: வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு பொறுப்பேற்பதிலிருந்து தப்பிக்கவே, இதுபோன்ற கற்பனையான விஷயங்களை ராகுல் பரப்புவதாக பாஜக விமா்சனம் செய்தது.

தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்: பாஜக

தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்படவேண்டும்? என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகா் கூறினாா்.

தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘மழை வெள்ளம், நிலச் சரிவால் வயநாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதியின் எம்.பி.யான ராகுல் கடைசி நபராக அங்கு சென்றுள்ளாா். தொகுதியின் மீதான அவருடைய பொறுப்பு குறித்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனா். இதிலிருந்து தப்பிக்கவே, அமலாக்கத்துறை சோதனை திட்டம் என்ற கற்பனையான விஷயங்களை ராகுல் பரப்புகிறாா்’ என்றாா்.