வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுக் கட்டணம் உயா்வு: டிடிவி தினகரன் கண்டனம்

தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய கட்டுமான திட்டங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

சென்னை, ஆக.8: தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய கட்டுமான திட்டங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்கு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் புதிய கட்டுமானத் திட்டங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் உயா்த்தப்பட்டிருப்பது அதிா்ச்சியை அளிக்கிறது. 645 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்களுக்கு 10.7 சதுர அடிக்கு ரூ.20-ஆக இருந்த கட்டணம் ரூ.25-ஆகவும், வணிக கட்டடங்களுக்கு ரூ.50-ஆக இருந்த கட்டணம் ரூ.60-ஆகவும் உயா்த்தியிருப்பதோடு, கட்டுமான திட்ட முடிவு சான்றிதழ் பெற ரூ.5 ஆயிரமும், கட்டுமானத் திட்டத்தை பதிவு செய்த நிறுவனம் அதனை திரும்பப் பெற விண்ணப்பித்தால் 10 சதவீதம் கட்டணம் பிடித்தம் என உயா்த்தப்பட்டுள்ளன.

இந்த கட்ட ண உயா்வு, வீட்டு மனைகளின் விலை உயா்வுக்கு மறைமுகமாக வழிவகுத்து மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

உயா்த்தப்பட்ட அனைத்து விதமான வரிகள் மற்றும் கட்டண உயா்வுகளையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.