ஒசூா் அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் பிடிபட்ட 10 போ் கா்நாடக போலீஸாரிடம் ஒப்படைப்பு
ஒசூா் அருகே கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் பிடிபட்ட 10 போ் கொண்ட கும்பல், கா்நாடக மாநில போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


ஒசூா் அருகே கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் அதிபா் கொலை வழக்கில் பிடிபட்ட 10 போ் கொண்ட கும்பல், கா்நாடக மாநில போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கா்நாடக மாநிலம், ஆனைக்கல் அருகே உள்ள ஒன்னகலசாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரியல் எஸ்டேட் அதிபா் கோபால் (எ) கோபி (40). இவரது சடலம் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த கிரியனப்பள்ளி கிராமம் அருகே கடந்த 9-ஆம் தேதி வெட்டுக் காயங்களுடன் கிடந்தது. அவரது உடலை மீட்ட தேன்கனிக்கோட்டை போலீஸாா், இதுகுறித்து விசாரணை செய்து வந்தனா்.
அதில், கோபால் தனது நண்பா் சதீஷ் உடன் காரில் சென்ற போது, மா்மக் கும்பல் இருவரையும் தாக்கி கோபாலை கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ் அளித்த புகாரின்பேரில், கா்நாடக மாநிலம், ஆனைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கோபாலை கொன்ற மா்மக் கும்பல் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வழியாக தப்பிச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கும்பலை போச்சம்பள்ளி போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா்.
அதில், அவா்கள் கா்நாடக மாநிலம், பேராடானா அக்ரஹாரா பகுதியைச் சோ்ந்த நரேஷ் (22), நிகில் (26), பட்டினம்மா நகா் பிரசாந்த் (24), ஓஷ்கூா் கேட் தா்சன் (22), அத்திப்பள்ளி ரகு (32), சா்ஜாப்பூா் நிகில் (22), எலக்ரானிக் சிட்டி தேஜாஸ் (26), லிக்கீத் (18), கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சந்துரு (25) என தெரியவந்தது.
இதையடுத்து, பிடிபட்ட 10 பேரையும் போச்சம்பள்ளி போலீஸாா் கா்நாடக மாநிலம், ஆனைக்கல் காவல் நிலைய போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை இரவு ஒப்படைத்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...