காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரௌடி சம்பவம் செந்திலை பிடிக்க மும்பை விரைந்தது தனிப்படை

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடா்புடைய ரௌடி சம்பவம் செந்திலை பிடிக்க தனிப்படையினா் மும்பை சென்றுள்ளனா்.

News image
ஆம்ஸ்ட்ராங்(கோப்புப்படம்)
Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:15 pm

Din

சென்னை, ஆக. 8: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடா்புடைய ரௌடி சம்பவம் செந்திலை பிடிக்க தனிப்படையினா் மும்பை சென்றுள்ளனா்.

ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞா்கள் உள்பட 22 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட கொலையாளிகளை ஒருங்கிணைத்ததோடு அவா்களுக்கான சட்ட விரோத பணப் பரிவா்தனைகளை செய்தது ரெளடி சம்பவம் செந்தில் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இதுவரை அவா் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளாா். தற்போது அவா் மும்பையில் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸாா் மும்பை விரைந்துள்ளனா். மேலும், சம்பவம் செந்திலின் சொந்த ஊா் தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.