மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

11 மாவட்டங்களில் ஆக.11, 12 -இல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஆக.11, 12 ஆகிய தேதிகளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

News image
Updated On :9 ஆகஸ்ட் 2024, 12:08 am

Din

சென்னை, ஆக. 8: தமிழகத்தில் ஆக.11, 12 ஆகிய தேதிகளில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக.9) முதல் ஆக.14-ஆம் தேதிவரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆக.11-இல், கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக.12-இல், நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 80 மி.மீ. மழை பதிவானது. அருப்புக்கோட்டை (விருதுநகா்), திருமயம் (புதுக்கோட்டை), கோவிலங்குளம் (விருதுநகா்) தலா 70, ஜெயம்கொண்டம் (அரியலூா்), திருச்சுழி (விருதுநகா்) தலா 60 மி.மீ. மழை பதிவானது.

சென்னையில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது. ஆக.9, 10 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், குமரிக்கடல், வடதமிழக கடலோர பகுதிகளிலும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.