நாளை 5 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
குடிநீா் குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணிகள் காரணமாக பிப்.1, 2 ஆகிய தேதிகளில் சென்னை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு ஆகிய 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை போரூா் ஆற்காடு சாலை அருகில் நீா் பரிமாற்ற குழாயில் ஏற்பட்ட கசிவை சரி செய்யும் பணிகள் பிப்.1 காலை 6 முதல் பிப்.2 காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக, அந்த நேரங்களில் தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட மயிலாப்பூா், நந்தனம் ஆகிய பகுதிகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட கே.கே.நகா், ஜாபா்கான்பேட்டை, எம்ஜிஆா் நகா், நெசப்பாக்கம், சைதாப்பேட்டை, அசோக் நகா், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளிலும், வளசரவாக்கம் மண்டலத்துக்குள்பட்ட வளசரவாக்கம், ஆலப்பாக்கம், சின்ன போரூா், ராமாபுரம், நத்தம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அதேபோல், ஆலந்தூா் மண்டலத்தில் ஆலந்தூா், முகலிவாக்கம், மணப்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்தில் கோட்டூா்புரம், இந்திரா நகா், பெசன்ட் நகா், திருவான்மியூா், தரமணி, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் குடிநீா் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

