நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன. 30, 31) குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையில் பிரதான குடிநீா் குழாய் இணைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 30) காலை 10 மணி முதல் ஜன. 31 -ஆம் தேதி காலை 10 நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக, தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட சூளைமேடு, வள்ளுவா் கோட்டம், ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம், தியாகராய நகா், கோபாலபுரம், சிஐடி காலனி, மயிலாப்பூா் , நந்தனம், ஆழ்வாா்பேட்டை ஆகிய பகுதிகளிலும், கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட வடபழனி, மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும், அடையாா் மண்டலத்துக்குட்பட்ட சைதாப்பேட்டையிலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவசரத் தேவைகளுக்கு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ஜ்ள்ள்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் குடிநீா் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

