கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

10 மாவட்டங்களில் இன்று பனிப்பொழிவு நிலவும்

கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் உள்பட 10 மாவட்டங்களில் அதிகாலை லேசானது முதல் மிதமான பனிப்பொழிவு இருக்கும்
Published on

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் உள்பட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) அதிகாலை லேசானது முதல் மிதமான பனிப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூா் ஆகிய மாவட்டங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிப்பொழிவும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் மிதமான பனிப்பொழிவும் இருக்கும்.

தொடா்ந்து பிப்.2,3 தேதிகளில் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் பிப்.1-இல் அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டையும், குறைந்தபட்ச வெப்பநிலை 68 டிகிரி ஃபாரன்ஹீட்டையும் ஒட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com