பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அமலாக்கத் துறை வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை -நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்.
Updated On :9 ஆகஸ்ட் 2024, 12:09 am

Din

சென்னை, ஆக. 8: எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக  அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்  சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் 2023 ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது.

குற்றச்சாட்டு  பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்த முதன்மை அமா்வு நீதிமன்றம், அவரை வியாழக்கிழமை ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது.  அதன்படி, புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, மருந்துகளை ஏற்றுவதற்காக போடப்படும் ஊசி பொருத்தப்பட்ட கையுடன் ஆஜா்படுத்தப்பட்டாா். செந்தில் பாலாஜிக்கு எதிராக  அமலாக்கத் துறை சாட்சிய குற்றச்சாட்டுகளை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின்னா் தமிழிலும் படித்துக் காட்டி, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்கிறீா்களா எனக் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, ‘நான் குற்றவாளி அல்ல, நிரபராதி.  நான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை.   எனக்கு எதிரான இந்த வழக்கு, முற்றிலும் புனையப்பட்ட ஒன்று.  அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன்.  என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை.  அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக தொடரப்பட்ட இந்த பொய் வழக்கில், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன்’ என த் தெரிவித்தாா்.

இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக வழக்கை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலையும் நீட்டித்து உத்தரவிட்டாா். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 54-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.