பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஏப்.10-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள்

News image

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்.

Updated On :9 மார்ச் 2026, 9:00 pm

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணையை ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்த கூட்டங்களில் சி.வி.சண்முகம் எம்.பி. தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்பிரமணியம் தனித்தனியே வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்குகள் மீதான விசாரணை மீண்டும் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகி, இவ்விரு வழக்குகளை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறும் கோரி மனுத் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.