குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூ ன் 8-க்கு ஒத்திவைப்பு

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூன் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறித்து...

News image

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூ ன் 8-க்கு ஒத்திவைப்பு - கோப்புப்படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 3:36 pm IST

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூன் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

இந்த கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்ரமணியம் தனித்தனி அவதூறு வழக்குகளைத் தொடுத்தாா்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகினா். மேலும் நீதிமன்றத்தில்சி.வி.சண்முகம் ஆஜா் ஆகாததற்கான காரணம் குறித்து தனி மனுவைத் தாக்கல் செய்தனா்.

அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி மற்றொரு மனுவை அதிமுக வழக்குரைஞா்கள் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து வழக்குகளை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) எஸ்.ராஜசிம்மவா்மன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Summary

Hearing on Defamation Cases Against C.V. Shanmugam Adjourned to June 8.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.