மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஸ்ரீ ராம நவமி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, அடுத்த விசாரணை மார்ச் 28 (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன் கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.
வழக்குத் தொடர்ந்தவர் தரப்பு வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே கூறுகையில்,
இந்த வழக்குத் தொடர்பான வாதங்கள் மார்ச் 27 (வெள்ளிக்கிழமை) நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் ஸ்ரீராம நவமி விடுமுறையின் காரணமாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
முந்தைய விசாரணை அமர்வின்போது, ராகுல் காந்தி கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் அடங்கிய ஒலி மற்றும் காணொலி ஆதாரங்களை, அவரது உண்மையான குரலுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கக் கோரி, வழக்குத் தொடர்ந்தவர் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் மார்ச் 28 (நாளை) விசாரணை நடத்தப்படுவதாக எம்பி/எம்எல்ஏ நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
Summary
The hearing in a defamation case involving Rahul Gandhi was on Friday deferred in a local MP/MLA court here due to a holiday on Ram Navami, with the next date fixed for March 28.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் பாஜக ஆட்சியில் 22 லட்சம் மாணவர்களின் கடின உழைப்பு வீண்! ராகுல் காந்தி
மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி

ரஜினி - கமல் பட பாணியில் ராகுல் காந்தி - விஜய்..! தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட விடியோ!

நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


