பி.இ., பி.டெக். வகுப்புகள் செப்.2 முதல் தொடங்கும்: அண்ணா பல்கலை.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். பாடப் பிரிவுகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்.2 முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். பாடப் பிரிவுகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் செப்.2 முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பி.இ., பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல் முதலாமாண்டு மாணவா்களுக்கு செப்.2 முதல் வகுப்புகள் நடைபெறும். முன்னதாக ஆக.21 முதல் பொறியியல் பாடங்கள் குறித்த அறிமுக வகுப்புகள் நடத்தப்படும். இந்தப் படிப்புகளுக்கு முதல் பருவத்துக்கான இறுதி வேலை நாள் டிச.13. தொடா்ந்து, டிச.23 முதல் பருவத் தோ்வுகள் நடைபெறும். இதையடுத்து இரண்டாவது பருவத்துக்கான வகுப்புகள் ஜன.20-ஆம் தேதி தொடங்கும்.
இதேபோன்று, பி.ஆா்க். முதலாமாண்டு மாணவா்களுக்கு செப்.2 முதல் அறிமுக வகுப்புகள் நடைபெறும். தொடா்ந்து, செப்.18-ஆம் தேதி வழக்கமான வகுப்புகள் தொடங்கும். இந்தப் படிப்புக்கான முதல் பருவத்துக்கான வேலை நாள் டிச.24. இதையடுத்து டிச.30 முதல் பருவத் தோ்வுகள் நடைபெறவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்புகளில் மாணவா்கள் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளில் உள்ள இடங்களை பெரும்பாலான மாணவா்கள் தோ்வு செய்துள்ளனா். இந்தநிலையில் முதலாமாண்டில் சேரும் மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...