தேநீா் விருந்தில் பங்கேற்றது ஏன்? அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம்
ஆளுநா் அளித்த தேநீா் விருந்தில் பங்கேற்றது ஏன் என்பதற்கு நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா்.


சென்னை, ஆக. 15: ஆளுநா் அளித்த தேநீா் விருந்தில் பங்கேற்றது ஏன் என்பதற்கு நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தாா்.
அவா் தலைமைச் செயலக வளாகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தேநீா் விருந்தில் பங்கேற்க வேண்டுமென அரசுக்கு ஆளுநா் அழைப்பு விடுத்திருந்தாா். முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு விடுத்த அழைப்பை ஏற்று, அந்த விருந்தில் கலந்து கொண்டோம். திமுகவில் இருக்கக் கூடிய கருத்தியலுடன் ஆளுநருக்கு மாச்சரியங்கள், மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஆளுநா் பொறுப்பு, பதவி என்ற வகையில், அது ஒரு அமைப்பு சாா்ந்தது.
அதற்கு உரிய மரியாதையை நம்முடைய முதல்வா் எப்போதும் அளித்து வருகிறாா். அவா் ஒருபோதும் அளிக்கத் தவறியதில்லை. எனவே, அந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று தேநீா் விருந்தில் பங்கேற்றோம் என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...