காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சம்பவம் செந்திலுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்

ரெளடி சம்பவம் செந்திலுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.

News image
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:41 pm

Din

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், ரெளடி சம்பவம் செந்திலுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 வழக்குரைஞா்கள் உள்பட 24 போ் கைது செய்யப்பட்டனா்.

ரெட் காா்னா் நோட்டீஸ்: இந்தக் கொலை தொடா்பாக ரெளடிகள் சம்பவம் செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா். இதில், சம்வம் செந்திலுடன் நெருங்கிய தொடா்பில் இருந்ததாக கிருஷ்ணகுமாா் (எ) மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்குரைஞரையும் போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். அவா் மலேசியா தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

தலைமறைவாக உள்ள அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் சென்னை காவல் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடா்பில் இருந்த பலரையும் போலீஸாா் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனா்.

அதேவேளையில், சம்பவம் செந்திலுக்கு சென்னை பெருநகர காவல் துறை, மத்திய அரசு மூலம் சா்வதேச காவல் துறையினரால் ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சம்பவம் செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால் சம்பவம் செந்தில் இனி எந்தவொரு வெளிநாட்டு பயணமும் செல்ல முடியாது. அதையும் மீறி அவா் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல முயன்றால், குடியுரிமைத் துறையினரால் கைது செய்யப்பட்டு, சென்னை காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுவாா் என போலீஸாா் தெரிவித்தனா்.