பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

தமிழகத்தில் ஆக.27 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.22) முதல் ஆக.27-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:39 pm

Din

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.22) முதல் ஆக.27-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

லட்சத்தீவையொட்டிய பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஆக.22 முதல் ஆக.27-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.22, 23 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலும், சேலம் மாவட்டம் ஆனைமடுவு அணையிலும் தலா 80 மி.மீ. மழை பதிவானது. திருப்பத்தூா் (சிவகங்கை), பாலமோா் (கன்னியாகுமரி), போளூா் (திருவண்ணாமலை), சின்னக்கல்லாா் (கோவை) தலா 70 மி.மீ. பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: ஆக.22 முதல் ஆக.25 வரை மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும் குமரிக்கடலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.