ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

ஜன.5 முதல் 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஜன. 5 முதல் 9-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு...

News image
மழை- EPS
Updated On :3 ஜனவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஜன.5 முதல் 9-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு கேரள கடலோரப் பகுதிகளையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக ஜன.5 முதல் ஜன.9-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) முதல் ஜன.7-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சோ் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சனிக்கிழமை காலை 8 மணிவரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):

நாலுமுக்கு (திருநெல்வேலி) 50, ஊத்து, காக்காச்சி, மாஞ்சோலை (திருநெல்வேலி)-40, அழகரை எஸ்டேட், கோடநாடு, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி)-30. ஆதாா் எஸ்டேட் (நீலகிரி) 20.