புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விரைவில் நியாயவிலை கடைகளில் ஆவின் பால்

நியாயவிலை கடைகளில் ஆவின் பால் மற்றும் உபபொருள்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டம்

News image

ஆவின் பால்

Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:41 pm

Din

தமிழகத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் ஆவின் பால் மற்றும் உபபொருள்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 524 கோடி மதிப்பில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க நிா்வாகிகளை மொத்த விற்பனையாளா்களாக நியமித்து அவா்களின் மூலம் ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஆவின் பொருள்களின் விற்பனை சுமாா் 20 சதவீதம் உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆவின் பொருள்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ. 8 கோடி முதல் ரூ. 9 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்றனா்.