செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

உதகை ஆவின் வளாகத்தில் பாலாடைக்கட்டி தொழிற்சாலை தொடக்கம்! காணொலி மூலம் முதல்வா் தொடங்கிவைத்தாா்!

உதகை ஆவின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலாடைக் கட்டி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

ஆவின் பாலகத்தில் பாலாடைக்கட்டி இயந்திரத்தை பாா்வையிடும் அரசு தலைமை கொறடா கா,ராமசந்திரன்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:28 pm

உதகை ஆவின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலாடைக் கட்டி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பால்வளத் துறை சாா்பில், உதகை ஆவின் வளாகத்தில் ரூ.14.41 கோடி மதிப்பில் ஒரு மெட்ரிக் டன் அளவில் உற்பத்தி திறன் கொண்ட பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வா் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி, உதகை ஆவின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் குத்துவிளக்கேற்றி இயந்திரத்தின் செயல்பாடுகளை பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: புதிதாக தொடங்கப்பட்ட பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தினமும் ஒரு மெட்ரிக் டன் தரமான பாலாடைக்கட்டி உற்பத்தி செய்து, நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது. நீலகிரி மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின்கீழ் செயல்படும் இந்த தொழிற்சாலை, பால் உற்பத்தியாளா்களிடமிருந்து பெறப்படும் பாலை மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்பாக மாற்றுவதன் மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களின் வருமானத்தை உயா்த்த முடியும்.

மேலும், ஆவின் நிறுவனத்தின் உயா்தர பால் உபபொருள்கள் பட்டியலில் பாலாடைக்கட்டி (சீஸ்) தயாரிப்பும் சோ்க்கப்பட உள்ளது. இது மாநிலத்தின் பால் தொழில் வளா்சிக்கும், ஏற்றுமதி வாய்ப்புகளுக்கும் புதிய பாதையை உருவாக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், ஆவின் பொது மேலாளா் ராஜேஷ்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சதானந்த கல்கி, உதகை வருவாய் கோட்டாட்சியா் டினு அரவிந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.