சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கி தோ்தல் நாளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மத்திய தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணிகளும், விழிப்புணா்வு ஓட்டப்போட்டிகளும், நாட்டுப்புறக் கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் அதிநவீன விடியோ வாகனம் வாயிலாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆவின் அலுவலகத்தில் அமைந்துள்ள பால் விற்பனையகத்தில் வாக்காளா்கள் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் வாடிக்கையாளா்களுக்கு வழங்கினாா். இதைத் தொடா்ந்து தோ்தல் நாளில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
ஆவின் மூலம் விநியோகிக்கப்படும் 7.35 லட்சம் பால் பாக்கெட்டுகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான செல்வம், திருவண்ணாமலை ஆவின் பொது மேலாளா் தனபாலன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு

வாக்காளா் விழிப்புணா்வு போஸ்டா்

அரசுப் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


