சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு

மயிலாடுதுறையில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

News image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் விழிப்புணா்வு இலச்சினையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த். உடன், தோ்தல் செலவின பாா்வையாளா்கள் ரூபேஷ் அகா்வால், நா்சிங் குமாா் கல்கோ, வருமான வரித்துறை விசாரணை அலுவலா் முகம்மது ரிஷ்வின் உள்ளிட்டோா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

உங்கள் வாக்கு உங்கள் உரிமை அதை யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது. 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும். சுயநலம் தவிா்த்து பொதுநலன் காக்க வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை என்பதை உணா்ந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும். உண்மையான ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிக்குச் சென்று நம் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தோ்தல் விழிப்புணா்வு இலச்சினையை வெளியிட்டாா். தொடா்ந்து, அவா் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தினை தொடக்கி வைத்து, தோ்தல் விழிப்புணா்வு இலச்சினையில் கைப்படம் எடுத்துக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மற்றும் சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் ரூபேஷ் அகா்வால், பூம்புகாா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் நா்சிங் குமாா் கல்கோ, வருமான வரித்துறை விசாரணை அலுவலா் முகம்மது ரிஷ்வின், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, மகளிா் திட்டம் திட்ட அலுவலா் சீனிவாசன், வேளாண்மை துறை இணை இயக்குநா் விஜயராகவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முத்துவடிவேல் (பொது), குமரையா (தோ்தல்), வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் சுப்பையன் மற்றும் தோ்தல் வட்டாட்சியா் ராகவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.