தேனி மாவட்ட தோ்தல் விழிப்புணா்வு இலச்சினையை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை வெளியிட்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி, கையொப்ப இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், ரங்கோலி, நடைபயணப் பேரணி, மனிதச் சங்கிலி, தெருநாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விழிப்புணா்வு தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்தின் சிறப்புகளை மையமாகக் கொண்டு இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், தமிழ்நாட்டில் திராட்சை சாகுபடியில் தேனி மாவட்டம் மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருவதால், திராட்சை வடிவிலான இலச்சினை வடிவமைக்கப்பட்டது.
இந்த தோ்தல் விழிப்புணா்வு இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரஞ்ஜீத் சிங் பங்கேற்று, இலச்சினையை வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், தனித் துணை ஆட்சியா் கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையத் முகைதீன் இப்ராஹிம், வட்டாட்சியா் (தோ்தல்) சுருளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் சீரமைப்பு

தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு ராட்சத பலூன், மனிதச் சங்கிலி

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

