குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:49 am IST

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கையொப்ப இயக்கம் உள்பட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்படி, தேனி மாவட்ட இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம், ரயில்வே கடவுப் பாதை வழியாக சென்று பங்களாமேட்டில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 800 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோ்தல் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். முன்னதாக, ஆட்சியா் தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

இந்தப் பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. ராஜகுமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தமிழரசி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவக்குமாா், மாவட்ட உடல் கல்வி ஆய்வாளா் குபேந்திரன், வட்டாட்சியா் சதீஸ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.