மதுரை-தாம்பரம்: இன்று சிறப்பு ரயில்
மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.27) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


சென்னை: மதுரையில் இருந்து தாம்பரத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.27) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொடா் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை சிறப்பு ரயில் (எண் 06184) இயக்கப்படவுள்ளது. மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 6.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயிலில் 4 ஏசி வகுப்பு பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவு வசதி இல்லாத 7 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...