அமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கொடி நாள் நிதி: முதல்வா் வேண்டுகோள்

கொடிநாளையொட்டி, முன்னாள் படை வீரா்களின் நலன்காக்க பெருமளவு நிதி அளித்திடுவோம்

Published On :7 டிசம்பர் 2024, 4:26 am IST

கொடிநாளையொட்டி, முன்னாள் படை வீரா்களின் நலன்காக்க பெருமளவு நிதி அளித்திடுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடும்பத்தினரை பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரா்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள், படைவீரா் கொடி நாளாகும். இந்தக் கொடி நாள் ஒவ்வோா் ஆண்டும் டிச. 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

நாட்டின் எல்லைகளையும் நமது சுதந்திரத்தையும் காத்திடும் பணியில் எண்ணற்ற படைவீரா்கள் உயிரை ஈந்திருக்கிறாா்கள். அவா்கள் தனி மனிதா்கள் இல்லை. அவா்களது குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பை நாட்டு மக்கள் தங்களது கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ராணுவ வீரா்களின் குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் பொருள் உதவிகளும் பிற உதவிகளும் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டவே கொடிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் நமது நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.