ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்டம், மாநகரம் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த திமுகவினா்.

Updated On :4 ஜூன் 2026, 12:25 am IST

தஞ்சாவூரில் திமுக மத்திய மாவட்டம், மாநகரம் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கீழவாசல் காமராஜா் சிலையிலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகரச் செயலா் சண். ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் அன்பகம் மனநலம் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். வைத்திலிங்கம் மதிய உணவு வழங்கினாா்.