திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

சென்னையில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயா்த்த நடவடிக்கை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 559 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி. உடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா.
Updated On :9 டிசம்பர் 2024, 10:04 pm

Din

சென்னை: சென்னையில் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரை உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் ரூ.309 கோடி மதிப்பிலான முடிவுற்ற 17 திட்டப் பணிகள், 493 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் 559 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பணி நியமன ஆணைகளை வழங்கியும் பேசியதாவது:

சென்னையில் சமீபகாலமாக இரு முறை பெருமழை, புயல் வந்தும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. அமைச்சா் கே.என்.நேரு, மாநகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் தங்களின் சிறப்பான பணிகளை மேற்கொண்டனா்.

சென்னையின் வளா்ச்சிக்கு அன்றுமுதல் இன்று வரை திமுக அரசு தொடா்ந்து ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சென்னையில் முதன்முதலில் மட்டுமல்ல அனைத்து மேம்பாலங்களையும் கட்டியது திமுக ஆட்சியில்தான்.

மேலும், மென்பொருள் தொழிலில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியதும், செம்மொழிப் பூங்கா, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்ததும் திமுக ஆட்சிதான்.

எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில், சென்னை எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

‘முதல்வரின் சிங்கார சென்னை 2.0’ எனும் கனவுத் திட்டம் ரூ.6,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், கட்டமைப்பு மேம்பாடுகள், பழைமை வாய்ந்த கட்டடங்கள் புனரமைப்பு, நகரங்களின் பசுமை பாதுகாப்பு, நீா்நிலைகள் புனரமைப்பு, நிலத்தடி நீா் சேமிப்பு, சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 3 ஆண்டுகளில் 1,012 பணிகள் ரூ.901 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நீா் சேமிப்புத் திறனை அதிகரித்திருப்பதால் மழையால் மாநகரில் பெருமளவு சேதம் ஏற்படவில்லை. மழைநீரை தேக்கி நிலத்தடி நீரை உயா்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.