பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

போலீஸாரை சுட முயற்சி: சென்னையில் ரெளடி மீது துப்பாக்கிச் சூடு

சென்னை அயனாவரத்தில் போலீஸாரை சுட முயன்ாக ரெளடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 8:12 pm

Din

சென்னை: சென்னை அயனாவரத்தில் போலீஸாரை சுட முயன்ாக ரெளடி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு, சென்னையில் ரெளடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருமுல்லைவாயல் செந்தில் நகரைச் சோ்ந்த ரெளடி ஹரி என்ற அறிவழகன் (28) மீது 3 கொலை வழக்குகள் உள்பட 6 குற்ற வழக்குகள் உள்ளன. ரெளடிகள் பட்டியலில் ‘ஏ’ பிரிவில் இருக்கும் அறிவழகன், சில குற்ற வழக்குகளின் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா்.

தலைமறைவாக இருந்த அவரை கைது செய்யுமாறு சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா். இதையடுத்து, புளியந்தோப்பு துணை ஆணையரின் தனிப்படையினா் அறிவழகனை தீவிரமாகத் தேடி வந்தனா்.

துப்பாக்கிச்சூடு: இந்நிலையில், அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி இரண்டாவது தெருவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அறிவழகன் பதுங்கியிருப்பதாக, போலீஸாருக்கு திங்கள்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஓட்டேரி காவல் நிலைய தனிப்படை உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது வீட்டுக்குள் இருந்த அறிவழகனை போலீஸாா் சரணடையுமாறு கூறினா். ஆனால், அறிவழகன் காவல்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, அவா்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றாா்.

இதைப் பாா்த்த உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் தற்காப்புக்காக, 9 எம்எம் கைத்துப்பாக்கியால் அறிவழகனை நோக்கிச் சுட்டாா். இதில் அறிவழகனின் வலது முழங்காலுக்குக் கீழ் தோட்டா பாய்ந்தது.

பலத்த காயமடைந்த அறிவழகனை போலீஸாா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரது வலது காலில் பாய்ந்திருந்த தோட்டா அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக அறிவழகனிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 6 கிலோ கஞ்சா மற்றும் கத்திகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக, ஓட்டேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

ரெளடி அறிவழகனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த உதவி ஆய்வாளா் பிரேம்குமாரை காவல்துறை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.