இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

விசாகப்பட்டினம் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

எழும்பூா் - விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயிலில் டிச.14 முதல் 2025-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி வரை இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2024, 9:36 pm

Din

சென்னை: சென்னை எழும்பூா் - விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயிலில் டிச.14 முதல் 2025-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி வரை இரண்டு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விசாகப்பட்டினத்திலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சென்னை எழும்பூருக்கும், மறுமாா்க்கமாக எழும்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் விசாகப்பட்டினத்துக்கும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08557, 08558) இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக, இருமாா்க்கத்திலும் டிச.14 -ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மாா்ச் 2-ஆம் தேதி வரை குறைந்த கட்டண குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி ஒன்றும், படுக்கை வசதிகொண்ட பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.