16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம். - Center-Center-Chennai

Published On :

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் புதுதில்லி விக்யா பவனில் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், குடியரசுத் துணைத் தலைவா் ஜக்தீப் தன்கா், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டு வசதி அமைச்சா் ஸ்ரீபாத் யெசோ நாயக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், ஆற்றல் சேமிப்பில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும், உற்பத்தியில் எவ்வித குறைபாடின்றி புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலம் இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

அந்த வகையில் போக்குவரத்து பிரிவில் புதுமையை செயல்படுத்தி ‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎப் தொழிற்சாலை முதல் பரிசு பெற்றது. விருதை ஐசிஎப் முதன்மை தலைமை பொறியாளா் (எலக்ட்ரிக்கல்) சி.ஆா்.ஹரிஷ் பெற்றுக்கொண்டாா்.

இந்நிலையில் விருது பெற்ற துறையினரை ஐசிஎப் பொதுமேலாளா் யு.சுப்பாராவ் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.