வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளி பரோல் கோரி மனு

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளி பரோல் கோரி மனு

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:02 am IST

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளி ரமேஷ்பாய் சந்தனா குஜராத் உயா் நீதிமன்றத்தில் பரோல் கோரி வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்தாா். அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடா்பாக 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறிப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் அனைவரையும் குஜராத் அரசு விடுதலை செய்தது. அவா்களின் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 11 பேரின் விடுதலையை ரத்து செய்ததுடன், அவா்களை சிறையில் சரணடைய கடந்த ஜன.8-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவா்கள் கோத்ரா சிறை அதிகாரிகளிடம் சரணடைந்தனா். அவா்களில் ரமேஷ்பாய் சந்தனா என்பவா், மாா்ச் 5-ஆம் தேதி தனது உறவினா் திருமணத்தில் கலந்துகொள்ள பரோல் கோரி, குஜராத் உயா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உரிய அமா்வுக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்குமாறு அந்த நீதிமன்றப் பதிவுத் துறைக்கு உயா் நீதிமன்ற நீதிபதி குஷ்பு வியாஸ் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பிரதீப் மோதியா என்பவருக்கு பிப்.7 முதல் பிப்.11 வரை பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.