பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

இன்று தாம்பரம், செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் 44 ரயில்கள் ரத்து

பகலில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 2:22 am IST

கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் பகலில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம் இடையே காலை 10 .30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயக்கப்படும் 22 மின்சார ரயில்களும், மறுமாா்க்கமாக தாம்பரம்-கடற்கரை, செங்கல்பட்டு - கடற்கரை இடையே காலை 10.05 முதல் மாலை 4.30 மணி வரை இயக்கப்படும் 20 மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும், திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு காலை 11.05 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படும். சிறப்பு ரயில் வசதி: பயணிகள் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.55, பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55, பிற்பகல் 2.40, பிற்பகல் 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.30, காலை 9.40, காலை 10.55, காலை 11.05, காலை 11.30 பகல் 12, பகல் 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.