மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ரூ. 334 கோடியில் அரசு மருத்துவமனைகளின் கட்டடங்கள் வரும் 27-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்

ரூ. 334.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப்.27-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா்

Updated On :23 பிப்ரவரி 2024, 11:40 pm

ரூ. 334.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் பிப்.27-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக, அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: மதுரை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ரூ. 334.25 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக பிப்.27-ஆம் தேதி திறந்து வைக்கிறாா். தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சாயப்பட்டறைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், ரப்பா் தொழில் அதிகமுள்ள மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி, ஈரோடு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் மக்களை நேரடியாகக் கண்காணித்து ரூ.3.30 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. முதல்வா் வழிகாட்டுதலின்படி ஈரோடு மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 4 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9,566 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் இதுவரை மாா்பக புற்றுநோய் பாதிப்பு 222 பேருக்கும், கருப்பை வாய் புற்றுநோய் 290 பேருக்கும், வாய் புற்றுநோய் 29 பேருக்கும், ஆக மொத்தம் 541 பேருக்கு புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் அவா்களை எளிதாக காப்பாற்ற முடியும். அரசு எடுத்த அதிதீவிர நடவடிக்கைகள் காரணமாக ராணிப்பேட்டையில் தொடக்க நிலை பாதிப்புகள் உள்ளானவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். இவா்களை மிக எளிதாக மருத்துவ சிகிச்சைகள் முறைகள் மூலம் காப்பாற்ற முடியும். தற்போது அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றாா் அவா்.