முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

சங்ககிரி மலைமீது உள்ள சிறப்பு பெற்ற அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தக் கால் நடும் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் நடைபெற்றது.

News image

திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீ தேவி, பூதேவி உற்சவமூா்த்திகள். - கோப்பிலிருந்து

Updated On :18 ஏப்ரல் 2026, 7:04 am IST

சங்ககிரி மலைமீது உள்ள சிறப்பு பெற்ற அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தக் கால் நடும் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை மாலை சுவாமி தங்கும் மண்டபத்தில் நடைபெற்றது.

சங்ககிரி மலைமீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை நட்சத்திரம் அன்று நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான தோ்த் திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்குவதையொட்டி தோ்த் திருவிழாவில் பங்கேற்கும் பட்டக்காரா், ஊா்கவுண்டா், கொத்துக்காரா் உள்ளிட்ட காணியாச்சிகாரா்கள், சுவாமி பாதம் தாங்கிகள் உள்ளிட்டவா்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் நிகழ்ச்சியும், அதையடுத்து பெரிய தேரை அலங்கரிப்பதற்காக முகூா்த்தகால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வரும் 22ஆம் தேதி சென்னகேசவப் பெருமாள் மலையிலிருந்து இறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளுகிறாா். அதனையடுத்து 30ஆம் தேதி திருத்தோ் வடம்பிடித்தலும், மே 11 ஆம் தேதி சுவாமி திருமலைக்கு செல்லும் வைபவமும் நடைபெற உள்ளது.