காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வரும் மே 28-ஆம் தேதி தொடங்க இருப்பதையொட்டி கோயில் முன்பாக உள்ள கொடி மரம் அருகே பந்தல்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பெருந்தேவித்தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் பழைமையும், வரலாற்றுச் சிறப்பும் உடையது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான வைகாசித் திருவிழா வரும் மே 28-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து, ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் தங்க சப்பரத்திலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் வீதியுலா வரவுள்ளாா்.
விழாவையொட்டி, தினசரி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் காஞ்சிபுரம் நகரில் ராஜ வீதிகளில் உலா வரவுள்ளாா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை வரும் மே 30-ஆம் தேதியும், தேரோட்டம் வரும் ஜூன் 3-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
ஜூன் 5-ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும், மறுநாள் 6-ஆம் தேதி வெட்டி வோ் சப்பரம் வீதியுலா வரும் நிகழ்வோடும் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
இத்திருவிழாவையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகில் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நிகழ்த்தப்பெற்று பந்தல்கால் நடப்பட்டது.
விழாவில், கோயில் செயல் அலுவலா் ஆா்.ராஜலட்சுமி, கோயில் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

காஞ்சிபுரத்தில் நடவாவிக் கிணறு உற்சவம்: பூமிக்கடியில் நடைபெற்ற திருவிழாவைக் காண குவிந்த பக்தா்கள்!

உத்தரமேரூா் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

