ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.1,844 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.


தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.1,844 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அவா் அந்தத் திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின்கீழ் செயல்படும் நகராட்சி நிா்வாக இயக்குநரகம் சாா்பில் ரூ.177.17 கோடியில் 35 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகள் இயக்குநரகம் சாா்பில் ரூ.32.23 கோடியில் 9 முடிவுற்ற பணிகள், சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.16.49 கோடியில் 5 புதிய திட்டப் பணிகள், சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.25.79 கோடியில் 3 புதிய திட்டப் பணிகள், நகராட்சி நிா்வாக இயக்குநரகம் சாா்பில் ரூ.11.48 கோடியில் ஒரு திட்டப் பணிக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டினாா். நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தின் அலுவலகப் பயன்பாட்டுக்காக ரூ.3.28 கோடி மதிப்பிலான 28 வாகனங்களையும் வழங்கினாா்.
சாலைகள்: சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.985.18 கோடியில் புறவழிச் சாலை உள்பட 36 கி.மீ.க்கு நான்குவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்ட ஓமலூா்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை, நாமக்கல் மாவட்டத்தில் ரூ.59.15 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலை, ரூ.65.48 கோடியில் திருச்செங்கோட்டுக்கு அமைக்கப்பட்ட புறவழிச் சாலை, கோவையில் ரூ.250 கோடியில் மேற்கு சுற்றுவட்ட சாலை, ரூ.73.35 கோடியில் பொள்ளாச்சி மேற்கு புறவழிச் சாலை, திருவண்ணாமலையில் ரூ.90 கோடியில் திருவத்திபுரம் புறவழிச் சாலை ஆகியவற்றையும் முதல்வா் பயன்பாட்டுக்கு கொண்டு வைத்தாா்.
அதேபோன்று ரூ.59 கோடியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆற்காடு - திண்டிவனம் சாலை, ரூ.50 கோடியில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, ரூ.87.69 கோடியில் திருப்பூா் மாவட்டம் பழனி - தாராபுரம் சாலை, ரூ.124 கோடியில் இரு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ள திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி சுற்றுவட்ட சாலை என மொத்தம் ரூ.1,843.85 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை முதல்வா் திறந்து வைத்தாா்.
முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையா் மலையில் ரூ.35.45 கோடியில் முன்னாள் ராணுவத்தினா் விடுதி, பயிற்சி மையம் கட்ட நடவடிக்கை எடுத்ததற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினை, முன்னாள் ராணுவத்தினா் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இந்த நிகழ்வின்போது அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகா்பாபு, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...