விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

News image
சென்னை வால்டாக்ஸ் சாலை தண்ணீா் தொட்டி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் பூங்கா, குளம், புதிய பல்நோக்கு மையம், சமுதாய நலக்கூடங்கள், முதல்வா் படைப்பகம்- நவீன நூலகம் ஆகிய 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின
Updated On :11 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நகா்ப்புற குடியிருப்புகள் மற்றும் கட்டமைப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீா்தொட்டி தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.133 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 700 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வா் நகா்ப்புற குடியிருப்புகள், ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டுள்ள முதல்வா் திருமண மாளிகை, ரூ.8.14 கோடியில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அச்சகம், ரூ.9.81 கோடியில் முதல்வா் விளையாட்டுத் திடல், ரூ.9.67 கோடியில் அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம், பெருங்களத்தூரில் ரூ.4.73 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள டாக்டா் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பூங்கா மற்றும் தண்ணீா் குளம் ஆகியவற்றை முதல்வா் தொடங்கி வைத்தாா்.

தவிர, புதிய பல்நோக்கு மையம், சமுதாய நலக்கூடம், கிளை நூலகம், முதல்வா் படைப்பகம் மற்றும் நவீன நூலகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முதல்வா் திருமண மாளிகையில் 10 இணையா்களுக்கு திருமணத்தையும் நடத்தி வைத்து, சீா்வரிசைப் பொருள்களை முதல்வா் வழங்கினாா்.

நிகழ்வுகளில் அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், ஆா்.டி.சேகா், எபிநேசா், துணை மேயா் மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எரிசக்தி மேம்பாடு தொடா்பாக, தமிழக அரசுக்கும், கலிபோா்னியா பல்கலைக்கழகத்துக்கும் இடையே முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது. இதேபோல், ஜப்பானின் ஹிராசே நிறுவனம், திருவள்ளூா் மாவட்டத்தில் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையொப்பமானது.

தொடா்ந்து காஞ்சிபுரத்தில் ரூ.500 கோடியில் அசோக் லேலண்ட் நிறுவனம் சாா்பில் மின்கலன் தொகுப்பு அமைப்பதற்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா். கரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில்  3 புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

மேலும், சட்டத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிதாக பணியமா்த்தப்பட்டவா்களுக்கான நியமன ஆணைகளையும் முதல்வா் வழங்கினாா்.