மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கோயில்களில் உழவாரப் பணிகள் திட்டம் வகுக்க அரசுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், உழவாரப் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :23 பிப்ரவரி 2024, 11:42 pm

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், உழவாரப் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பழைமையான பாரம்பரியம் மிக்க கோயில்களில் துய்மைப் பணிகள், பொதுமக்கள் பங்கெடுக்கும் வகையில் உழவாரப் பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதை எதிா்த்து சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் காா்த்திகேயன், என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஆதிகேசவலு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காா்த்திகேயன் நேரில் ஆஜராகி, கோயில்களில் உழவார பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி மறுப்பதால், பல பாரம்பரியமான கோயில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதாக தெரிவித்தாா். குறிப்பாக, திருக்குறுங்குடி நாதா் திருக்கோயில், மருதநல்லூா், கும்பகோணம் கோயில், தெப்பக்குளங்கள், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோயில் தெப்பக்குளம் பகுதிகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் கொடுக்கப்பட்டன. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தமிழக முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா். அதேபோல், இந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள 267 பாடல் பெற்ற ஸ்தலங்கள், 183 வைபவ ஸ்தலங்கள், 84 வைணவ ஸ்தலங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில், குழு அமைத்து மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட துணை நீதிபதிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். இந்த உத்தரவுகள் அனைத்தையும் 2 வாரத்துக்குள் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.