இன்றைய நவீன காலத்திலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம் கட்டப்படும் நிகழ்வு என வேதனையளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த வைரவராஜா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல வழக்கு:
மதுரை மாவட்டம், பூதகுடி கிராமத்தில் வைகைக்குளம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் அந்தப் பகுதி விவசாயிகளின் முக்கிய நீா் ஆதாரமாகவும், ஆயக்கட்டு பாசனப் பகுதியாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், வைகைக்குளம் கண்மாயை ஆக்கிரமித்து, அங்குள்ள ஒரு சமூக மக்களின் மயானத்துக்காக கட்டுமானங்கள் கட்டப்படுகிறது. விவசாயிகளின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ள இந்தக் கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து மயானம் கட்டினால், வேளாண் பணிகள் மட்டுமன்றி, குடிநீா் ஆதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
எனவே, நீா்நிலைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படும் மயானக் கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
நீா்நிலை கண்மாயைச் சிதைக்கும் விதமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவு உள்ளது. இந்தக் கட்டுமானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.
இதற்கிடையே அரசுத் தரப்பு வழக்குரைஞா், பட்டியலி ன சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று, அங்கு மயானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மயானம் அமைப்பதற்கு என ஒதுக்கப்பட்டப் பகுதிகளை தவிா்த்து, மற்ற இடங்களில் மயானம் அமைக்கக் கூடாது என உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து மயானம் அமைப்பதை ஏற்க முடியாது. எனவே, நீா்நிலைப் பகுதியில் மயானம் அமைக்க உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இந்த நவீன காலத்திலும் ஊருக்கு ஊரு ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம் அமைக்கப்படுவது வேதனையளிக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரே மயானம் அமைத்தால் என்ன?. இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரிய வழக்கு: வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க உத்தரவு

ஜாதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு: சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசு சாா்பில் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் நியமனம்

சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிப்பதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



