சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசு பிளீடா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரிஷ் தாக்கா் பிறப்பித்துள்ள உத்தரவு:
சென்னை உயா்நீதிமன்றத்தின் அரசு பிளீடா்களாக ஆா்.கௌரி, ஜி.தனமாத்ரி, முஹமது ஃபயாஸ் அலி, எம்.சிவவா்த்தனன், எம்.குருபிரசாத், அமிா்த பூங்கொடி தினகரன், கே.சதீஷ், கே.சுரேந்தா், டோமினிக் எஸ்.டேவிட், ஆா்.சக்கரவா்த்தி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அதேபோன்று, உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு பி.சரவணன், எம்.பி.செந்தில், ஆா்.பாா்த்திபன், ஐ.பினய்காஷ், எஸ்.சிவசுப்பிரமணியன், எஸ்.சிவதிலகா்,கே.பொற்கொடி ஆகியோா் அரசு பிளீடா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
அரசு வழக்குரைஞா்கள் நியமன விதிகளின்படி நிரந்தர அரசு வழக்குரைஞா்கள் முறையாக நியமிக்கப்படும் வரை இவா்கள் அரசு சாா்பில் ஆஜராகி வாதிடுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மயானப் பாதை விவகாரம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தொண்டி பேரூராட்சி நிதி முறைகேடு: செயல் அலுவலா்கள் மீது நடவடிக்கை

துப்பாக்கி உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரிய வழக்கு: வருவாய் நிா்வாக ஆணையா் பதிலளிக்க உத்தரவு

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



