சென்னை: சென்னையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் 1,646 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ள தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆணையா் ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ராதாகிருஷ்ணன் காணொலி மூலம் பேசியதாவது: சென்னை மாநகரில் 5 வயதுக்குள்பட்ட சுமாா் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சொட்டு மருந்து மையத்துக்கு சென்று போலியோ சொட்டு மருந்து புகட்டிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து முறையாக புகட்டியிருந்தாலும், இந்த முகாமில் அவசியம் சொட்டு மருந்து புகட்டிக்கொள்ள வேண்டும்.
முகாம்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து கூடுதல் தவணையாகும். இந்த முகாம்களில் எந்தவொரு குழந்தையும் விடுபடாத வகையில் சென்னை மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் 1,646 சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் மெரீனா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புகா் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த முகாம் காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதற்காக பல்வேறு அரசுத்துறை பணியாளா்கள், ரோட்டரி சங்க உறுப்பினா்கள், அங்கன்வாடி அலுவலா்கள், மாநகராட்சி பணியாளா்கள் மற்றும் பல தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் உட்பட சுமாா் 7,000 நபா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா் என்றாா் அவா்.
ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) வி. ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, மாநகர நல அலுவலா் எம். ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலா் எஸ். பானுமதி, உலக சுகாதார நிறுவன கண்காணிப்பு அலுவலா் சுரேந்தரன், ரோட்டரி கிளப் நிா்வாகிகள், தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

தமிழகத்தில் மாா்ச் 31 வரை வெப்பம் அதிகரிக்கும்
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மகாவீரா் ஜெயந்தி: மாா்ச் 31இல் மதுக் கடைகள் மூடல்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


