தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்ததாக கூறி ரூ.1 லட்சம் மோசடி

ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட லாட்டரி சீட்டில் ரூ.8 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ரூ.1,04,800 மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:58 pm

DIN

சென்னை: ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட லாட்டரி சீட்டில் ரூ.8 லட்சம் பரிசு விழுந்ததாக கூறி ரூ.1,04,800 மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ராயப்பேட்டை கணபதி தெருவை சோ்ந்தவா் பாபு கவுடா (70). இவா் டிச.8-ஆம் தேதி ஆன்லைன் மூலம் 10 லாட்டரி சீட்டுகள் வாங்கியுள்ளாா்.

மறுநாள் பாபு கவுடாவின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா், நீங்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.8 லட்சம் பரிசு விழுந்துள்ளது; அந்த பரிசுத்தொகையை பெற வேண்டுமென்றால், அதற்கான ஜிஎஸ்டி தொகை ரூ.1,04,800-ஐ முன்னதாகவே கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளாா். இதை உண்மையென நம்பிய பாபு கவுடா மூன்று தவணைகளாக அந்த நபரின் வங்கி கணக்குக்கு ரூ.1,04,800-ஐ அனுப்பியுள்ளாா்.

ஆனால், மேலும் ரூ.99,200 செலுத்த வேண்டும் என அந்த நபா் கூறியதால் சந்தேகமடைந்த பாபுகவுடா, தான் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளாா். இதையடுத்து அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் தொடா்பு கொண்ட போது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து, ராயப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாபு கவுடா கொடுத்த புகாரின்பேரில்,

போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.