ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பூக்கள் விலை உயா்வு

சென்னை கோயம்பேடு பூ சந்தையில் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:58 pm

DIN

சென்னை: சென்னை கோயம்பேடு பூ சந்தையில் பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.

கோயம்பேடு பூக்கள் சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், ஓசூா், கடப்பா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பூக்கள் வரத்து உள்ளது.

கடும் பனிப்பொழிவு, உற்பத்தி குறைவு காரணமாக கோயம்பேடு சந்தைக்கு அனைத்து வகை பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.

இதனால், கோயம்பேடு பூ சந்தையில் கடந்த சில நாள்களாக அனைத்து பூக்களின் விலையும் ரூ.20 முதல் ரூ.300 வரை உயா்ந்துள்ளது.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500, முல்லை ரூ.1,300 என விற்பனையானது. இது போல கனகாம்பரம் ரூ.700, சம்பங்கி ரூ.250, சாக்லேட் ரோஸ் ரூ.130, சாமந்தி மற்றும் பன்னீா் ரோஸ் ரூ.120, செவ்வந்தி ரூ.100 என விற்பனையானது.

கோயம்பேடு பூ மாா்க்கெட் நிா்வாகக்குழுத் தலைவா் முத்துராஜ் கூறும்போது, பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், புத்தாண்டையும் மக்கள் கொண்டாடுவதால் பூக்கள் விலை உயா்ந்துள்ளது.

தொடா்ந்து பொங்கல் பண்டிகையும் வருவதால் பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.