ரூ. 29 கோடி பங்குச் சந்தை மோசடி: இளைஞர் கைது
பங்குச் சந்தை மோசடியில் ரூ. 29 கோடி மோசடி: இளைஞர் கைது


ஆவடி: அம்பத்தூர் அருகே பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 29 கோடி வரை மோசடி செய்த வழக்கில், இளைஞர் ஒருவரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அம்பத்தூர் அருகே கொரட்டூர், வாட்டர் கெனால் சாலையைச் சேர்ந்தவர் அஸ்வத் (32). எம்பிஏ பட்டதாரியான இவர் திருநின்றவூர்} பெரியபாளையம் சாலை, பண்டி காவனூரில் தனியார் நிறுவனம் பெயரில் வேர்க்கடலை ஏற்றுமதி செய்து வருகிறார்.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என இணையதளங்கள் மூலமாக வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார்.
இதை நம்பி அஸ்வத், அதில் மர்ம நபர்கள் குறிப்பிட்ட 28 வங்கி கணக்குகளில் கடந்த 2 மாதங்களாக ரூ. 29 கோடி வரை முதலீடு செய்துள்ளார்.
அதன் பிறகு, அவர் செலுத்திய பணத்திற்கு மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளில் லாபத்தொகையை எடுக்க முடியாமல் போனது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஸ்வத், இது குறித்து ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார்.
ஆணையர் கி.சங்கர் புகாரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸôருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மோசடி செயலில் ஈடுபட்ட நபரின் வங்கி கணக்குகள் மூலம் சென்னை, திருவல்லிக்கேணியில் குற்றவாளி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸôர் விரைந்து சென்று திருவல்லிக்கேணி, கானாபாக் தெருவைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் (34) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விசாரணையில், அவர் கூறிய வங்கிக் கணக்குகளில் முதலீடு செய்த பலரிடம் பல கோடி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இதன் பிறகு போலீஸôர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...