திருத்தணி ரயில் சேவையில் மாற்றம்
சென்னை: சென்னை சென்ட்ரல்-திருத்தணி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்ட்ரலிலிருந்து திருத்தணிக்கு இரவு 8.10 மணிக்கு செல்லும் மின்சார ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமை (ஜூலை 11, 13) அரக்கோணத்துடன் நிறுத்தப்படும்.
மறுமாா்க்கமாக திருத்தணியிலிருந்து அதிகாலை 4.30 மற்றும் 5.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12, 14) அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.
இதுபோல் அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படும். திருத்தணியிலிருந்து அரக்கோணத்துக்கு இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வியாழன் மற்றும் சனிக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
