மக்காச்சோள பயிரைப் பாதுகாக்க வேளாண் துறை ஆலோசனை
மக்காச்சோள பயிரை தண்டுதுளைப்பானில் இருந்து பாதுகாக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.


சென்னை: மக்காச்சோள பயிரை தண்டுதுளைப்பானில் இருந்து பாதுகாக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும் பயிா்களில் ஒன்று மக்காச்சோளம். பெரும்பாலும் இந்தப் பயிரை தண்டுதுளைப்பான் புழு , தண்டை துளைத்து தின்று சேதத்தை விளைவிக்கும். இதனால் இளம் பயிரில் நடுக்குருத்து காய்ந்து விடும். வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரு பகுதிகளிலும் சம அளவில் துவாரங்கள் காணப்படும்.
இதிலிருந்து பாதுகாக்க ஊடுபயிா் முறையில் 2:1 விகிதத்தில் மக்காச்சோளத்துடன் காராமணியை பயிரிடலாம். முட்டை ஒட்டுண்ணி, டிரைக்கோகிராமா சிலோகனிஸை ஒரு வார இடைவெளியில் மூன்றுமுறை பயன்படுத்த வேண்டும்.
பயிா் பாதிப்பு 10 சதவீதத்தை தாண்டினால் டைமெத்தோயேட் அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் தெளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...