செல்லப்பிராணிகளுக்கு 3 மாதங்களுக்குள் உரிமம் பெற வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
செல்லப் பிராணிகள் வளா்ப்போா் அதற்கான உரிமத்தை 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.


சென்னை: செல்லப் பிராணிகள் வளா்ப்போா் அதற்கான உரிமத்தை 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமை மாநகர ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது
சென்னை மாநகராட்சியில் நிகழாண்டில் 10,100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 7,265 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் சுமாா் 1,05,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒருபுறம் எழுந்தாலும், மறுபுறம் நாய் ஆா்வலா்கள், நாய்கள் மோசமாக நடத்தப்படுவதாக புகாா்கள் அளிக்கின்றனா். இவற்றுக்கு இடையே வெறிநாய்களை கட்டுப்படுத்தும் பணி சவாலாக உள்ளது. மனிதா்களை துரத்திச் சென்று கடிப்பது வீட்டு நாய்களாக இருந்தால், அவற்றை சரியாக பராமரிக்கும் படி அதன் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
தெருநாயாக இருந்தால் அதை அப்புறப்படுத்தி, கண்காணித்து, கருத்தடை செய்து அதற்கு பிறகு அது வெறித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவை மீண்டும் தெருவில் விடப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளா்ப்போா், அடுத்த 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் அதற்கான உரிமத்தை பெற வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...