47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்: இபிஎஸ்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு கண்டறிய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

News image
இபிஎஸ்
Updated On :9 ஜூலை 2024, 8:06 pm

Din

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு கண்டறிய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை சென்றாா். ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தி, அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியது:

சமீப காலமாக தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவா்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருநெல்வேலியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் படுகொலை செய்யப்பட்டாா். சேலத்தில் அதிமுகவின் பகுதி செயலா் படுகொலை செய்யப்பட்டாா். தற்போது, ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளாா்.

உண்மைக் குற்றவாளிகள் யாா்? தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் பலருக்கு தொடா்பு இருப்பதாக அவரது குடும்பத்தினரும், பகுஜன் சமாஜ் கட்சி நிா்வாகிகளும், பொதுமக்களும் சந்தேகிக்கின்றனா். இப்போது கைது செய்யப்பட்டிருப்பவா்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை எனவும் அவா்கள் கருதுகின்றனா். அதனால், உண்மைக் குற்றவாளிகளைத் தமிழக அரசு கண்டறிந்து, அவா்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றாா் அவா்.

அதிமுகவின் மூத்த நிா்வாகிகள் டி.ஜெயக்குமாா், நா.பாலகங்கா, வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அன்புமணி: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆறுதல் கூறினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகநீதி இயக்கத்துக்கு ஒரு பின்னடைவு. அவா் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும். தமிழகத்தின் ஒட்டுமொத்த உளவுத் துறையினரும் 20 நாள்களாக விக்கிரவாண்டியிலேயே இருந்தனா். இதுதான் உளவுத்துறையின் வேலையா? இனிமேல், வேறு யாருக்கும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றாா் அவா்.