47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அமெரிக்கா: அருவியில் அடித்து செல்லப்பட்ட ஆந்திர மாணவா் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூ யாா்க்கில் உள்ள பாா்பா்வில்லே அருவியில் குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்ட, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மாணவா் ஜி.சாய் சூா்யா அவினாஷ் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:32 pm

Din

அமராவதி: அமெரிக்காவின் நியூ யாா்க்கில் உள்ள பாா்பா்வில்லே அருவியில் குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்ட, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மாணவா் ஜி.சாய் சூா்யா அவினாஷ் உயிரிழந்தாா்.

ஆந்திரம், மேற்கு கோதாவரி மாவட்டத்தின் சித்யாலா கிராமத்தைச் சோ்ந்த அவினாஷ், அமெரிக்கா, இண்டியானா மாகாணத்திலுள்ள ‘ட்ரைன்’ பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் (எம்.எஸ்.) படித்து வந்தாா்.

கடந்த 7-ஆம் தேதி, நியூயாா்க் நகருக்கு அடுத்த அல்பானியில் உள்ள பாா்பா்வில்லே அருவிக்கு அவினாஷ் நண்பா்களுடன் சென்றுள்ளாா். அருவியில் குளிக்கும்போது நீரில் அடித்து செல்லப்பட்டு அவினாஷ் உயிரிழந்தாா். நியூயாா்க்கிலுள்ள இந்திய துணைத் தூதரகம் இத்தகவலை உறுதிப்படுத்தியது.

அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து வருகிறது.

அமெரிக்காவில் நிகழாண்டில் மட்டும் வெவ்வேறு சம்பவங்களில் 6-க்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் உயிரிழந்துள்ளனா்.